விஜய் பட நடிகர் கொரோனா பாதிப்பால் மரணம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்

Vinoth

Updated on:

விஜய் பட நடிகர் கொரோனா பாதிப்பால் மரணம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்

 

நாடு கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருவதால் உயிரிழப்போர் எண்ணிக்கையும் அதிகரித்தவண்ணமே உள்ளது.சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவரும் இந்த கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.இந்நிலையில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான கில்லி பட நடிகர் கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

கடந்த 2004ஆம் ஆண்டு நடிகர் விஜய் மற்றும் திரிஷா நடிப்பில் வெளியான கில்லி படத்தில் துணை நடிகராக நடித்தவர் தான் மாறன்.இந்த படத்தில் அவர் விஜய்யின் நண்பராக ஆதிவாசி என்ற கேரக்டரில் நடித்திருப்பார்.இது மட்டுமல்லாமல் இவர் டிஷ்யூம்,தலைநகரம்,பட்டாசு,வேட்டைக்காரன்,கேஜிஎப் உள்ளிட்ட பல படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார்.இவ்வாறு துணை நடிகராகவும்,வில்லனாகவும் நடித்த இவர் சில கானா பாடல்களையும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவர் சென்னை அருகிலுள்ள செங்கல்பட்டு நத்தம் பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில் தான் இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா அறிகுறிகள் இருப்பதையடுத்து சோதனை செய்து பார்த்ததில் கொரோனா தொற்று உறுதிசெய்யபட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

 

இந்நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த துணை நடிகர் மாறன் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார்.48 வயதாகும் அவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

இவ்வாறு கொரோனா பாதிப்பால் திரையுலகத்தை சேர்ந்தவர்கள் அடுத்தடுத்து மரணமடைவது அவர்களது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.