தல அஜித்தின் வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு

Vinoth

Updated on:

Valimai Motion Poster-Cinema News in Tamil

தல அஜித்தின் வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு

தமிழ் திரையுலகில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் தான் நடிகர் அஜித்.அவர் அடுத்து நடித்துவரும் படம் வலிமை.நடிகர் அஜித்தின் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கிய ஹெச் வினோத் இயக்குகிறார்.இந்த படமானது ஆரம்பிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் எந்த அப்டேட்டும் வராமல் இருந்தது.ஆனால் இதனுடன் ஆரம்பித்த மாஸ்டர் திரைப்படம் வெளியாகி நடிகர் விஜய் அடுத்த படத்தில் நடிக்க ஆரம்பித்து விட்டார்.

இந்நிலையில் அஜித் ரசிகர்கள் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு பிரதமர் மோடி,தமிழக அரசியல் தலைவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் என அனைவரையும் சம்பந்தமேயில்லாமல் தொல்லை செய்து வந்தனர்.இந்நிலையில் தான் வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.இதனையடுத்து அஜித் ரசிகர்கள் இதை கொண்டாடி வருகின்றனர்.

https://www.youtube.com/watch?v=7PMx8LyD7dU