தமிழ் திரையுலகில் தன்னுடைய தனிப்பட்ட செல்வாக்கு மற்றும் நடிப்பு திறமையால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் தான் இளைய தளபதி விஜய்.இவர் நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு படத்தையும் அவரது ரசிகர்கள் பெரும் வெற்றி பெற வைத்துள்ளனர்.
அந்த வகையில் நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாரான மாஸ்டர் படம் கொரோனா பாதிப்பு காரணமாக பல மாதங்களாக ரிலீசுக்காக காத்திருக்கிறது.
கடந்த ஏப்ரல் மாதமே திரைக்கு வரவிருந்த மாஸ்டர் திரைப்படம் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் தற்போது வரை திரைக்கு வராமல் அவரது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதாவது எக்காரணம் கொண்டும் மாஸ்டர் திரைப்படமானது OTT தளத்தில் வெளியாகாது என்றும், திரையரங்கில் தான் வெளியாகும் என்றும் பலமுறை தயாரிப்பாளர் தரப்பிலிருந்து ஏற்கனவே பல அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளது.
ஆனாலும் சமீபத்தில் OTT தளத்தில் வெளியான சூரரைப் போற்று திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து மாஸ்டர் திரைப்படம் OTT-யில் தான் வெளியாகவுள்ளதாகவும், இது குறித்த பேச்சுவார்த்தை அனைத்தும் முடிந்து விட்டதாகவும் வதந்திகள் பரவி வருகின்றன.
திரையரங்கில் வெளியான பிறகு தான் OTT தளத்தில் மாஸ்டர் படத்தை வெளியிடுவோம் என்பதையும் தயாரிப்பாளர் உறுதி செய்துள்ளார், அதுவும் அமேசான் ப்ரைமில் வெளியிடுவோம் என்பதையும் படக்குழுவினர் குறிப்பிட்டுள்ளனர்.
இதனையடுத்து மாஸ்டர் திரைப்படம் குறித்து விரைவில் நல்ல செய்தி வெளியாகும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.