சுந்தர பாண்டியன் படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் வந்தவர் லட்சுமி மேனன். பிறகு கும்கி, றெக்க, வேதாளம் என பல படங்களில் நடித்து தமிழ் இளைஞர்கள் மனதில் பெரிய இடத்தை பெற்றார் லட்சுமி மேனன்.
இதையடுத்து பட வாய்ப்பு இல்லாத லட்சுமி மேனன் மாடர்ன் ரோல்களை ஏற்று நடித்து வந்தார். ஆனால் அவருக்கு அது செட் ஆகவில்லை. படவாய்ப்பு குறைந்தது.

சமீப காலமாக அவர் பரத நாட்டியம் கற்று கொண்டு அவ்வபோது சமூக வலைதளங்களில் வீடியோக்களையும் புகைப்படத்தையும் பதிவிட்டு வருகிறார்.மேலும் பிக்பாஸில் பங்கேற்க போகிறார் என்ற வதந்திகள் வந்த நிலையில் அதை மறுத்தார். அதில் அவர் “நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறவில்லை. அதோடு மற்றவர்களின் எச்சி தட்டை கழுவ முடியாது, கழிவறை கழுவவோ முடியாது.முக்கியமாக கேமராவுக்கு முன்னால் சண்டை போட மாட்டேன் என்று மூஞ்சில் அடித்தார் போல் சொல்லிவிட்டார்.

இந்நிலையில் கருணாஸ் உடன் இணைந்து திண்டுக்கல் சாரதி படத்தின் இரண்டாம் பாகத்தில் லட்சுமி மேனன் நடிப்பதாக வெளியாகியது. அதற்கு மீம்ஸ் கிரியேட்டர்ஸ் இதுக்கு இவங்க பாத்ரூம் கழுவ பிக்பாஸுக்கே போயிருக்கலாம் என சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து வந்த நிலையில் அது கொம்பன் பட பிடிப்பில் எடுத்த புகைப்படம் என்று லட்சுமி மேனன் விளக்கி உள்ளார்.