சமீபத்தில் இருட்டு அறையில் முரட்டு குத்து 2 படத்தின் போஸ்டர் வெளியானது. அதில் எக்கச்சக்கமான டபுள் மீனிங் போஸ்டரால் வைரலாகி மிகவும் பரபரப்பானது. ஆனால் இந்த போஸ்டர் ஒரு இந்தி படத்தில் அடல்ட் படத்தின் போஸ்டரை ஒத்திருப்பதால் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

ஹர ஹர மகாதேவகி மற்றும் ’இருட்டு அறையில் முரட்டுகுத்து’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் சந்தோஷ் ஜெயகுமார் இயக்கிய அடுத்த திரைப்படம் ’இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகம், இந்த படத்திற்கு ’இரண்டாம் குத்து’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கவுதம் கார்த்திக் சமூக வலைத் தளத்தில் பதிவிட்டு இருந்தார். அது மிகவும் பரவலாக பேசப்பட்டு வந்தது. இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒரு இந்தி படத்தை அப்படியே காப்பியடித்து உள்ளனர்.

இதை கண்டுபிடித்த நெட்டிசன்கள் இரண்டு போஸ்டரையும் ஒன்றாக சேர்த்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே காப்பி, அப்போ படமும் காப்பிய தான் இருக்குமோ? என்று கலாய்த்து வருகின்றனர்.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் சொந்தமாக சிந்தித்து படம் எடுக்க முடியாத இயக்குனர் எப்படி படத்தை மட்டும் காப்பி அடிக்காமல் எடுத்திருப்பார். இரண்டு போஸ்டரையும் ஒன்றாக்கி சமூக வலைத்தளங்களில் சொல்லும் கமெண்ட்டுகளுக்கு அளவில்லை.